திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.84,500 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை அருகே உள்ள அச்சுதாபள்ளி பகுதியில், மணிகண்டன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையின் போது, திண்டுக்கல் R.M.காலனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது பைக்கில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.84,500 பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தொகை திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அவர் அந்த பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்தியுள்ளார்.



